புறா தலை கொண்ட விசித்திர மீன்: ஆச்சர்யத்தை உண்டாக்கும் புகைப்படம்!

Report
198Shares

சீனாவின், கியுஸூ மாகாணத்தில் புறா தலையுடன் கூடிய விசித்திர தோற்றத்தில் உள்ள மீனின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

குறித்த மாகாணத்தில் உள்ள குயாங் நகரில் அண்மையில், வித்தியாசமான தோற்றத்தைக் கொண்ட மீன் ஒன்று மீனவர் ஒருவர் வலையில் சிக்கியுள்ளது.

இந்த மீனை தண்ணீரில் வைக்காமல் வெளியில் வைத்து பார்த்ததால், இந்த மீன் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளது.

கிராஸ் கார்ப் என்றழைக்கப்படும் இந்த வகை மீன்கள் சுத்தமான தண்ணீரில் மட்டுமே வாழும் தன்மை கொண்டது எனவும், ஆசியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் இது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

7332 total views