உங்கள் பாதுகாப்பு பகிரப்படாது.. ஸ்டேடஸ் வைத்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்ட விளக்கம்!

Report
92Shares

வாட்ஸ் அப் நிறுவனம் புதிய கொள்கையை அமல்படுத்துவதை மே 15 வரை ஒத்திவைப்பதாக நேற்று அறிவித்த நிலையில், தனது செயலி பாதுகாப்பானது என பயனர்களுக்கு ஸ்டேடஸ் வைத்து தெரியப்படுத்தி வருகிறது.

இதனிடையே, . தங்களது புதிய கொள்கை தொடர்பாக மக்களிடையே தவறான தகவல் பரவுவதாகவும், அதனை நீக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதால், மே 15ம் தேதி வரை புதிய கொள்கையை ஆராய்ந்து பயனாளர்கள் அதற்கு ஒப்புதல் வழங்கலாம் என , வாட்ஸ்-அப் நிறுவனம் அறிவித்தது.

இதனையடுத்து, தற்போது விளக்கம் அளிக்கும் வகையில் அந்நிறுவனம் ஸ்டேடஸ் வைத்துள்ளது. இது அனைத்து பயனர்களுக்கும் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் உங்களின் தனியுரிமை எங்களுக்கு முக்கியது. எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் என்பதால் உங்களின் தனிப்பட்ட உரையாடல்களை பார்க்கவோ, உங்களின் அழைப்புகளை கேட்கவோ எங்களால் முடியாது,.

நீங்கள் ஷேர் செய்யும் லொகேஷன்களை எங்களால் பார்க்க முடியாது, உங்களின் தொடர்பு எண்களை ஃபேஸ்புக்குடன் பகிர மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...