பரீட்சைக்கு செல்வதாக கூறி காதலனை திருமணம் செய்த மாணவி!

Report
160Shares

தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவி ஒருவர் வீட்டில் தேர்வுக்கு செல்வதாக பொய்க்கூறிவிட்டு தனது காதலனை திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அவர்களை கண்டுபிடித்த பெற்றோர்கள் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த அஜய் சென் என்ற இளைஞருக்கும், அவரது வீட்டின் அருகில் உள்ள 22 வயதான பாலிடெக்னிக் படிக்கும் மாணவி ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதல் விவகாரம் மாணவியின் வீட்டுக்கு தெரியவர அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த மாணவி தனது காதலனை சந்திக்காதவாறு அவர்கள் பார்த்துக்கொண்டனர். இந்நிலையில் தனக்கு கல்லூரியில் பரீட்சை இருப்பதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற அந்த மாணவி தனது காதலன் அஜய் சென்னை நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின்னர் இருவரும் வீட்டிற்கு பயந்து தலைமறைவாக இருந்துவந்தனர். இந்நிலையில் தங்களது திருமண சான்றிதழை பெற நீதிமன்றத்துக்கு வந்த அஜெய்யை அங்கிருந்த மாணவியின் வீட்டில் உள்ளவர்கள் கடத்தி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அஜய்யை மீட்டு இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

4975 total views