சாத்தானால் ஆட்கொள்ளப்பட்ட கன்னியாஸ்திரி எழுதிய கடிதம் :300 ஆண்டுகளுக்குப் பின் மொழிபெயர்ப்பு

Report Pious in உலகம்
163Shares

சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட கன்னியாஸ்திரி எழுதிய குறியீடுகளால் ஆன கடிதத்தை 300 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மொழிபெயர்த்துள்ளனர். இத்தாலி நாட்டின் தீவான சிசிலியில் அமைந்துள்ள பழமையான கன்னியாஸ்திரி மடம் ஒன்றில் இருந்து கடந்த 1676 ஆம் ஆண்டு புரியாத குறியீட்டு எழுத்துகள் கொண்ட கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கடிதத்தை எழுதிய மரியா க்ரோசிஃபிஸா செல்லா (Maria Crocifissa della) என்ற கன்னியாஸ்திரி தனது 15வது வயது முதல் அந்த மடத்தில் திருப்பணியாற்றி வந்துள்ளார். இவர் தன்னை சாத்தான் ஆட்கொண்டுள்ளதாகவும், சாத்தான் தான் நினைத்ததை தன் மூலம் சாதிக்க விரும்புவதாகவும், தன்னை பேய்களுக்கு சேவை செய்ய முயற்சிப்பதாகவும் மரியா குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தை மொழிபெயர்த்ததில், கடவுளும் இயேசுவும் மிக பாரமாக உள்ளதாகவும், மனிதன் கடவுளை உருவாக்கினான் ஆனால் அது யாருக்காகவும் செயல்படவில்லை. மேலும் பூமிக்கும் பாதாள உலகத்திற்கும் இடையே உள்ள ஸ்டைக்ஸ் என்ற நதி குறித்தும் கூறப்பட்டுள்ளது. ஆனால் குறித்த கடிதத்தை முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த குறியீடுகளை எழுதிய கன்னியாஸ்திரி குறித்து டேனியல் ஏபெட் என்ற ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் கூறியதாவது: அந்த கன்னியாஸ்திரி நிஜமாகவே சாத்தான் ஆட்கொண்டதா என்று தெரியவில்லை. கன்னியாஸ்திரிக்கு பல்வேறு பழமையான மொழிகளில் அதிக அறிவு இருந்திருக்கலாம், இதுபோன்ற குறியீடுகளை அவர் எழுதியிருக்கலாம்.

மேலும் அவருக்கு மனச்சிதைவு நோய் இருந்திருக்க வாய்ப்புள்ளது. அவரின் மன நோயே இதுபோன்ற கற்பனைக்கு காரணமாகவும் இருந்திருக்க இருக்க வாய்ப்புள்ளதுஎன்று தெரிவித்தார்.