புறப்பட்ட விமானத்தால் தூக்கி வீசப்பட்ட பெண்: பதறவைக்கும் சம்பவம்..!!

Report
490Shares

மேற்கிந்திய தீவுகளில் அமைந்துள்ள பிரபலமான விமான நிலையத்தில் விமானம் புறப்படும்போது எழுந்த விசையால் சுற்றுலாப்பயணி ஒருவர் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் St Maarten பகுதியில் அமைந்துள்ளது Princess Juliana சர்வதேச விமான நிலையம். பிரபலமான இந்த விமான நிலையத்தில் தான் பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் படுகாயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டை சேர்ந்த 57 வயது பெண்மணி ஒருவர் தமது குடும்பத்துடன் மேற்கிந்திய தீவுகளில் உள்ள Maho கடற்கரைக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார்.

இங்குள்ள Princess Juliana சர்வதேச விமான நிலையமானது தலை தொடும் உயரத்தில் விமானங்கள் பறந்து செல்வதால் மிகவும் பிரபலமானதாகும்.

இங்கிருந்து விமானம் புறப்பட்டு செல்லும்போது விமான எஞ்சினில் இருந்து புறப்படும் விசையால் பல முறை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு அங்குள்ள நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி விமானம் புறப்படும்போது அருகாமையில் உள்ள பொதுமக்கள், அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலியில் பிடித்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் சம்பவத்தின்போது விபத்துக்குள்ளான பெண்மணி பாதுகாப்பு வேலியை தவற விட்டுள்ளார். இதனால் விமானம் கிளம்பும்போது எழுந்த விசை காரணமாக அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள St Maarten சுற்றுலாத்துறை இயக்குனர், உரிய எச்சரிக்கை விடுத்திருந்தும் கவனக்குறைவால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த இழப்பினை அவர்களால் தவிர்த்திருக்க முடியும் இருப்பினும் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

19203 total views