நீண்ட கூந்தல் வளர வேண்டுமா? வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே செய்யலாம் வாங்க

Report
174Shares

பெண்களுக்கு நீளமான கூந்தல் கூடுதல் அழகை சேர்க்கும். இந்த காலத்தில் பெண்கள் சிறிய அளவில் தான் முடி வைத்திருப்பார்கள். காரணம் நீண்ட கூந்தல் சரியான பராமரிப்பில் தான் வளரும்.

முன்னோர்கள் கூந்தலிற்கான சரியான பராமரிப்பு செய்ததால் தான் நீண்ட கூந்தல் அவர்களுக்கு இருந்தது. அதிலும் வீட்டில் உள்ள இயற்கை பொருட்களை வைத்து கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது மிகவும் எளிமையான விஷயம். அந்த வகையில் கறிவேப்பிலை வைத்து இப்படி கூந்தல் வளச்சிக்கு உதவுவது என்று பார்க்கலாம்.

கறிவேப்பிலை விழுதை நேரடியாக தலைச்சருமத்தில் தடவிக் கொண்டால், வேர்களை அது சீர்செய்யும். மேலும் முடித்தண்டுகளின் வலுவை மீண்டும் பெறச் செய்யும்.

முடிந்தால் கறிவேப்பிலை விழுதை அப்படியே உண்ணலாம். கேசத்தின் வேர்களை கறிவேப்பிலை வலுவடையச் செய்வதால், முடியின் வளர்ச்சியும் வேகம் பிடிக்கும்.

இதை வழக்கமாக பயன்படுத்தி வந்தால், முடி கொடுத்தலை குறைத்து, வளர்ச்சியை அதிகரிக்கும். இவையெல்லாம் தவிர, கறிவேப்பிலை வயிற்றுப்போக்கைத் தடுக்கும், செரிமான அமைப்புக்கு நல்லது.

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் கறிவேப்பிலை உதவுகிறது. இப்படி இதன் பயன்களை கூறிக்கொண்டே போகலாம்.

7887 total views