பெண்கள் லெக்கிங்ஸ் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...

Report
177Shares

இன்றைய பெண்களுக்கு அணிவதற்கு சுலபமாகவும், வாங்குவதற்கு விலை குறைவாக இருப்பதும் லெக்கிங்ஸ். முந்தைய காலத்தில் பாலைவன மக்கள் இரவில் தங்களை குளிரிலிருந்து காத்துக்கொள்ள இந்த வகையான ஸ்கின் டைட் கார்மெண்ட்ஸ் ஐ பயன்படுத்தி வந்தார்கள். அதுவே இன்று பல மாடெல்களில் லெக்கிங்ஸ் ஆக வளம் வந்து கொண்டிருக்கிறது.

லெக்கிங்ஸ் வாங்கும் போதும் அணியும் போதும் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் பின்வருமாறு:-

லெக்கிங்ஸின் துணி மிகவும் முக்கியம். துணியின் வகை லைக்ரா, பிவிசி, ரேயான், ஸ்பேன்டெக்ஸ் ப்ளெண்ட் வகையாக இருக்க வேண்டும்.

இருக்கமான குட்டையான குர்தியின் கீழ் லெக்கிங்ஸ் அணியக்கூடாது.

ப்ளெயின் லெக்கிங்ஸ் மேல் பூப்போட்ட கும்தி அணிவதே நன்றாக இருக்கும். இல்லையென்றால் ப்ளெயின் குர்திக்கு பிரிட்டட் லெக்கிங்ஸ் அணியலாம்.

அளவு சிறிதான லெக்கிங்ஸ் அணிய வேண்டாம். போடும்போது நீண்டு கொடுத்தாலும் உடலின் பாகங்களை குறிப்பாக தொடைப் பகுதியை அசிங்கமாக வெளிப்படுத்தும்.

நீளமான குர்தி அல்லது அனார்கலியுடன் மட்டுமே பருமனான பெண்கள் லெக்கிங்ஸ் அணிவது நல்லது. காலர் மற்றும் முழுக்கை குர்திக்கு லெக்கிங்ஸ் அணிவதை தவிர்த்து சுரிதார் அணியலாம். பட்டன் மற்றும் ஜிப் பிரச்சனை இல்லாத ஜெக்கிங்ஸ் ஜீன்ஸ் பான்ட்டிற்கு சிறந்த மாற்றாக இருக்கும்.

6167 total views