இப்படியும் ஒரு பெண்ணா? முழுவதும் படியுங்கள் நெகிழ்ந்து போவீர்கள்..!

Report
1388Shares

சமீபத்தில் ஒரு பெரிய அசம்பாவித சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

அந்த சம்பவத்தில், 8 பேர் அடங்கிய ஒரு கும்பலால் கற்பழிக்கப்படுகிறார், சுனிதா கிருஷ்ணன். அப்போது அவருக்கு வயது 15 தான்.

ஆனாலும், வாழ்க்கை போச்சே என்று மற்ற பெண்கள் போன்று மூலையில் உட்கார்ந்து அழாமல் ஒரு அழகான முடிவை எடுத்தார்.

அந்த முடிவால் பல பெண்களின் வாழ்க்கை வெளிச்சம் பெற்றது.

அதாவது, தன்னை போல் பாலியல் வன்முறைக்கு ஆளான சிறுமிகள், பெண்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று களத்தில் இறங்கினார்.

அந்த நேரத்தில், சித்ரா என்கிற சிறுமியை, அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர், விபச்சார விடுதியில் விற்றுவிடுகிறார்.

ஒரு வாடிக்கையாளருக்கு ரூ 6000 என்ற கணக்கில், நாளொன்றுக்கு ரூ.50,000 சம்பாதித்துக் கொடுக்க வேண்டுமாம் அந்த பிஞ்சு உடல்.

அய்யோ கேட்கவே மனம் பதறுகிறது.

சிறைக் கைதியைப் போன்று அடைத்து வைக்கப்பட்ட அந்த குழந்தை வெளியே தப்பித்து வர 3 முறை முயன்றும், தோற்றுப் போன அந்தச் சிறுமி, இறுதியாக சுனிதா கிருஷ்ணனின் திறமையான செயல்பாடுகளால் காப்பாற்றப்பட்டு, ஐதராபாத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறாள்.

ஒரு முறை, சமூக விரோதிகளிடமிருந்து சிறுமிகளைக் காப்பாற்றப் போன இடத்தில் வாங்கிய அடி உதையால், இவரது வலது காது கேட்கும் திறனை இழந்திருக்கிறது.

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்துள்ளார்.

47980 total views