நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்! விமானி செய்த ஆச்சர்ய செயல்!

Report
177Shares

அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மெல்போர்ன் நோக்கி இரு தினங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவின் குவாண்டா நிறுவன விமானம் புறப்பட்டது.

இந்நிலையில், குறித்த விமானம் பசிபிக் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோது, காற்றின் சுழற்சி காரணமாக, இந்த விமானம் மீது மோதுவது போல மற்றொரு விமானம் வந்தது, விமானிக்கு கடைசி நேரத்தில் தான் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இந்த இரண்டு விமானங்களும் மோதுவதைத் தடுக்க, ஆயிரம் அடி உயரத்துக்கு கீழே குவாண்டா விமானத்தை இறக்க விமானிகள் துரிதமாக முடிவெடுத்தனர்.

அதன்படி 20 நொடிகள் வரை விமானத்தை தலைகீழாக இயக்கிய அவர்கள், பாதுகாப்பான இடத்தை அடைந்தனர். என்ன நடக்கிறது என்று அறியாமலேயே பயணிகள் அனைவரும் விமானத்தில் தலைகீழாகவே பயணித்தனர்.

பின்னர், பயணிகளுக்கு நடந்த சம்பவம் குறித்து விளக்கப்பட்டதாக குவாண்டோ விமான நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

நடுவானில் ரோலர்கோஸ்டரில் சென்றது போல இருந்ததாகவும், நிலைமையை விமானிகள் சிறப்பாக கையாண்டதாகவும் பயணிகள் சாதுர்த்தியமாக செயல்பட்ட விமானிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

5517 total views