பார்சலில் இருந்தது என்ன? பார்த்ததும் மயங்கி விழுந்த டிரம்ப் மருமகள் மற்றும் குடும்பத்தினர்!

Report
244Shares

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த மகனின் மனைவி வெனிசாவுக்கு திடீரென உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வந்த பார்சலில் ஆந்த்ராக்ஸ் பவுடரா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டெனால்டு ஜூனியர். இவரது மனைவி வெனிசா. இவர்கள் மன்ஹாட்டன் நகரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று வெனிசா வீட்டிற்கு தபால் ஒன்று வந்துள்ளது. அந்த தபால் உறையை பிரித்து பார்த்ததும் திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.

மேலும், தபால் உறையை பார்த்த அவரது தாயார் மற்றும் வீட்டு வேலைக்காரர்கள் என அடுத்தடுத்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, வெனிசா மற்றும் அவரது உறவினர்களை நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்பு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர்கள் நன்றாக உள்ளனர் என டொனால்ட் டிரம்ப் மகன் தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தபால் உறையில் ஆந்த்ராக்ஸ் எனப்படும் கொடிய விஷக்கிருமியை பரப்பும் பவுடர் தடவப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8085 total views