தந்தை விட மூத்த நபரை திருமணம் செய்ததால் பெண்ணுக்கு நேர்ந்த சிக்கல்

Report
1580Shares

வயதான நபரை இளம்பெண் திருமணம் செய்துள்ள நிலையில், பெண்ணின் கணவரை பலர் அவரது தந்தை என தவறாக எண்ணி விடுகின்றனர்.

பிரித்தானியாவின் Uxbridge நகரை சேர்ந்தவர் Roy (60), பேருந்து ஓட்டுனரான இவருக்கு கடந்த 2013-ல் Lucy Nagle (30) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

Lucy-ம் பேருந்து ஓட்டுனர் ஆவார், இருவரும் நெருங்கிய நண்பர்களான நிலையில் பின்னாளில் காதலாக மாறியுள்ளது.

வயதானவரை தான் திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிப்பார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில் இது குறித்து தனது காதலரை விட வயதில் சிறியவர்களான தனது தந்தை Simon Wilson (56) மற்றும் தாய் Karen Wilson (55)யிடம் Lucy பேசியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு Roy -ஐ பிடித்து போக கடந்த வருடம் மே மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

சாலையில் கணவர் Roy-யுடன் Lucy செல்லும் போது பலர் இருவரையும் தந்தை- மகள் என நினைத்து விடுகிறார்கள்.

திருமணமாகி ஒரு வருடத்துக்கு மேலாகியுள்ள நிலையில் Lucy இன்னும் கருத்தரிக்கவில்லை.

மருத்துவர்களிடம் இருவரும் பரிசோதனை செய்த போது Lucy-ன் கருப்பையில் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது.

Lucy இயற்கையாக கருத்தரிப்பது கடினம் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் தம்பதிகள் நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்கள்.

Lucy கூறுகையில், மற்ற பெண்களை போல கருத்தரித்து குழந்தை பெற்று கொள்ள ஆசையாக உள்ளது.

மருத்துவ சிகிச்சைக்கு அதிகளவில் செலவாவதால் நானும், Roy-ம் பணத்தை சேமித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

69473 total views