அண்டார்டிகா உறைபனியில் திருமணம் செய்த முதல் ஜோடி

Report
78Shares

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு ஜோடி தங்களது திருமணத்தை அண்டார்டிகா உறைபனியில் செய்துகொண்டுள்ளனர்.

உலகிலேயே முதன் முதலாக அண்டார்டிகா உறைபனியில் திருமணம் செய்து கொண்ட முதல் ஜோடியும் இவர்கள் தான்.

இங்கிலாந்தைச் சேர்ந்த டாம் சில்வஸ்டர் மற்றும் ஜுலி ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இவர்களது திருமணம் மற்றவர்கள் திருமணம் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

இதனையடுத்து இந்த தம்பதிகள் அண்டார்டிகாவில் திருமணம் செய்வதற்காக அனுமதி கேட்டு இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்தனர். இவர்களது கோரிக்கைகளை பரிசிலித்த அரசு அதற்கு ஓப்புதல் அளித்தது.

இங்கிலாந்து ஆய்வுப் பகுதியான ரோதேரா ஆய்வுநிலையம் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற இந்த ஜோடி உறைபனில் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களது திருமணத்தில் அண்டார்டிகா கண்டத்துக்கு சுற்றுலா சென்ற 20 ஆய்வாளர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3105 total views