காயங்களை விரைவில் ஆற்றும் ஸ்மார்ட் பெண்டேஜ்!!

Report
35Shares

உடலில் ஏற்படும் காயங்களை குணமடைய செய்யவே பெண்டேஜ் பயன்படுத்தப்படுகின்றது. தற்போது துரிதமான முறையில் காயங்களை ஆற்றுவதற்கு புதிய வகை பெண்டேஜ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை யுனிவர்சிட்டி ஆப் நெப்ராஸ்கா , ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் என்ற நிறுவனமே கண்டுபிடித்துள்ளது. இது போரில் ஏற்பட்ட காயங்களையும் நாட்பட்ட காயங்களையும் முழுவதும் குணப்படுத்தும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரே பெண்டேஜில் குறிப்பிட்ட காயத்திற்கான பல மருந்துகள் காணப்படுகின்றன. இது ஜெல் கொண்டு பூசப்பட்ட மின்சாரம் கடத்தும் இழைகளால் உண்டாக்கப்பட்டுள்ளது.

மேலும் அளவு சார்ந்து மருந்து வெளியிடும் முதல் பெண்டேஜ் இது தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

2330 total views