பாலியல் பலாத்கார குற்றம்...கைது செய்ய வந்த போலிசை கொலை செய்த புத்த பிட்சு....இலங்கையில் நடந்த கொடூரம்!....

Report
414Shares

இலங்கையில் பாலியல் பலாத்காரம் குற்றத்திற்காக தன்னை கைது செய்ய வந்த போலீஸ்காரரை புத்த பிட்சு கத்தியால் குத்தி கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் தென்கிழக்கு மாகாணமான ரத்னபுராவில் உள்ள கலண்டா பகுதியில் உள்ள புத்த மத கோயிலை சேர்ந்த கொன்வலனே தம்மசாரா தேரா என்ற புத்த பிட்சு பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்த புத்த பிட்சுவை கைது செய்ய காவல்துறை அதிகாரி ஒருவர் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த புத்த பிட்சு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரரை குத்தி கொலை செய்துள்ளார்.

சத்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். ரத்த வெள்ளத்தில் இருந்த அந்த போலீஸ்காரரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, புத்த பிட்சுவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். புத்த பிட்சு போலீஸை கொலை செய்த சம்பவம் இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

13718 total views