மகளுக்காக காத்திருந்த பெற்றோருக்கு கிடைத்த பேரதிர்ச்சி! காதலன் காரணமா..?

Report
290Shares

இலங்கையில் எல்பிட்டி – ஊரகாஹ - பரப்புவ பிரதேசத்தில் யுவதியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

21 வயதான யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை தனது பணி முடிந்து குறித்த யுவதி வீடு திரும்பாமையால் பெற்றோர் அவரை தேடியுள்ளனர்.

இதன்போது விபத்தில் சிக்கி தமது மகள் பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடயம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அங்கு சிகிச்சைப் பெற்று வந்த யுவதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த யுவதியை வேன் ரக வாகனம் ஒன்றில் வந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அந்த வாகனத்தின் இலக்கத்தை மருத்துவமனை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். பின்னர் வேனின் சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளார்.

சந்தேக நபர் மற்றும் யுவதியும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ள நிலையில், பின்னர் அந்த இளைஞர் திருமணமானவர் என்பதை அறிந்த யுவதி, காதலை நிராகரித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக யுவதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் மரணத்திற்கான உறுதியான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், சடலம் தொடர்பான பிரேத பரிசோதானை நாளை இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்...

9052 total views