சென்னையிலுள்ள ரவீஸ்வரர் கோவிலில் நிகழும் அதிசயம் உங்களுக்கு தெரியுமா?

Report
722Shares

சென்னை வியாசர்பாடியில் அமையப்பெற்றுள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயிலான "ரவீஸ்வரர்' கோயியில் பல அதியசங்கள் மறைந்துள்ளன.

அதாவது, அந்த கோயில் சன்னதியில் உள்ள சிலையில், எந்த வித இடைவெளியுமின்றி சூரிய வெளிச்சம் நேரடியாக படுவது போன்று அமையப்பெற்றுள்ளது. அவற்றைப் பற்றி சற்று தெளிவாக பார்க்கலாம்.

கோயிலின் சிறப்பு

சிவன் சன்னதிக்கு மேலேயுள்ள இந்திர விமானம், நடுவில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் கூடு போன்று கட்டப்பட்டிருக்கிறது. சிவன் மூலஸ்தானத்திலிருந்து பார்த்தால், இந்த அமைப்பு தெரியும். தினமும் சூரியபூஜை!: இக்கோயிலில் சிவன், கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் வாசல் கிடையாது.

தென்திசையில் உள்ள வாசல் வழியாக நுழைந்து தான், இவரைத் தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர். இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது. தினமும் இங்கு சூரியனே, முதலில் சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.

இதன் பின்புதான் காலசந்தி பூஜை செய்கின்றனர். சிவன் சன்னதி முன்மண்டபத்தில் சூரியன், இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை, உத்தராயண, தெட்சிணாயண புண்ணிய கால துவக்கம், மகரசங்கராந்தி (தைப்பொங்கல்), ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியன் இருவருக்கும் விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கிறது. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

வேண்டுதல்:

அறியாமல் செய்த பாவம் நீங்க சிவனிடமும், அறிவுக்கூர் மையான குழந்தைகள் பிறக்க முனை காத்த பெருமாள், கல்வி, கலைகளில் சிறந்து திகழ வேதவியாசரிடமும் வேண்டிக்கொள்கிறார்கள்.

நீண்ட நாட்களாக திருமணமாகாத பெண்கள் இங்குள்ள அம்பாளிடம் வேண்டிக்கொள்ள, அப்பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை. சிவன் சன்னதிக்கு பின்புறத்தில் வன்னி மரம் இருக்கிறது.

நாக தோஷம் உள்ளவர்கள், இம்மரத்திற்கு கீழேயுள்ள நாகருக்கு மஞ்சள்பொடி, பால் அபிஷேகம் செய்தும், பெண்கள் சுமங்கலிகளாக இருக்க தாலி கட்டியும் வேண்டிக்கொள்கிறார்கள்.

தல வரலாறு:

சூரியபகவானின் மனைவியான சமுக்ஞா தேவி, அவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச் சென்றுவிட்டதாகவும், சாயா (நிழல்) தேவி எனப்பட்ட அவள், சமுக்ஞாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டதாகவும் ஐதீகம் உள்ளது.

இதை அறிந்த சூரியன் அவளிடம் கேட்டபோது, சமுக்ஞாதேவி தன்னை பிரிந்து சென்றதை கூறியுள்ளார். கோபம் கொண்ட சூரியன், சமுக்ஞாதேவியைத் தேடிச் சென்ற பொழுது, வழியில் பிரம்மா, ஒரு யாகம் நடத்திக் கொண்டிருந்தாராம்.

மனைவியைத் தேடிச் சென்ற வேளையில், சூரியன் பிரம்மாவைக் கவனிக்கவில்லை. இதானால், தன்னை சூரியன், அவமரியாதை செய்ததாக எண்ணிய பிரம்மா, அவரை மானிடனாகப் பிறக்கும்படி சபித்துள்ளார்.

இந்த சாபம் நீங்க, நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டுள்ளார். அவருக்கு காட்சி தந்த சிவன், சாபவிமோசனம் கொடுத்தருளினாராம்.

சூரியனின் வேண்டுதலுக்காக சிவன், அந்த லிங்கத்தில் ஐக்கியமாகியுள்ளார்.

சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால், அவரது பெயரிலேயே "ரவீஸ்வரர்' (ரவி என்பது சூரியனின் ஒரு பெயர்) என்றும் பெயர் பெற்றார் என சாஸ்திரங்கள் கூறுகிறது.

கோயிலின் சிறப்பம்சம்!

சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர். இதற்கு நேரே நந்தி இருக்கிறது.

தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது.

23864 total views