பாவங்களை தீர்க்கும் புண்ணிய தீர்த்தங்கள்

Report
167Shares

ராமேஸ்வரம் ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் நீராடினால் பல தலைமுறைகள் செய்த பாவங்களும் அகலும் என்கிறார்கள்.

ராமேஸ்வரம் ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்கள் உள்ளன. இங்கு ஆலயம் எதிரில் உள்ள கடல் தீர்த்தமான அக்னி தீர்த்தத்தில் நீராடி, பின்பு வரிசையாக ஆலயத்தின் உள்ளே உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடவேண்டும். இப்படி செய்தால் ஒருவருடைய பல தலைமுறைகள் செய்த பாவங்களும் அகலும் என்கிறார்கள். இதனால் இப்பிறப்பில் அனுபவிக்கும் சகல பாவங்களும் விலகி ஆனந்தம் நிரந்தரமாய் உண்டாகும். இத்தல கோடி தீர்த்தத்தை ஆலயத்தில் பெற்றுவந்து வீடுகளிலும், தொழில் செய்யும் இடங்களிலும் தெளித்து வர, தரித்திரம், பீடைகள் அகன்று அபிவிருத்தி உண்டாகும். ஆலயத்தில் உள்ள 22 தீர்த்தங்கள் வருமாறு:

மகாலட்சுமி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம், சேது மாதவர் தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனா தீர்த்தம், கயா தீர்த்தம், சர்வ தீர்த்தம், சிவ தீர்த்தம், சாத்யாமமிர்த தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கோடி தீர்த்தம்.

5557 total views