காதலியை விட உலகில் யாரும் அழகு இல்லை என்று நினைக்கும் ஆண் மகன்களே இது உங்களுக்காக...

Report
274Shares

உன் காதலியை விட உலகில் யாரும் அழகு இல்லை என்று நினைக்கும் ஆண் மகன்களே இது உங்களுக்காக..

உன் காதலியை விட உலகில்

அழகான தேவதைகள் பிறக்கவில்லை என்று நினைப்பவர்களே,

உங்கள் அம்மாவின் சிறிய வயது போட்டோவை எடுத்து பாருங்கள் தேவதையாக இருப்பாள் அம்மா,

காதலியை கனவு காண்கின்றாய்

தேவதையாக

அருகில் தேவதை அம்மா வடிவில்

இருப்பது உனக்கு தெரியவில்லையே,

அவள் வயிற்றில் உன்னை பாரம் என்று

நினைத்திருந்தால் அவள் உன்னை கருவிலே அழித்திருப்பாள்,

அவளின் கருவுக்கு ஒரு

பொக்கிஷாம் கிடைத்திருக்கிறது என்று

எண்ணியே உன்னை பெற்றெடுத்தாள்,

தேவதையாக பார்க்கவேண்டிய தெய்வத்தை

தெய்வமாக பார்க்காமல்

கண்ணுக்கு தெரியதவளை காதலியாக

நினைத்து தேவதையாக பார்க்கின்றாய்,

உணர்வுக்கு மதிப்பில்லாத

சிலையை அழகு பார்க்கின்றாய்

உணர்வோடு இருக்கின்ற

தெய்வத்தை தெருவில் வீசுகின்றாய்,

உன் கால்களை கல்லும், முள்ளும்

பதம் பார்க்கும் என்று தெரிந்து தானே செருப்பை தேடுகின்றாய்,

ஆனாலும் உன் பாதங்களை

தரையில் வைக்காமல் உன்னை

தோளில் தூக்கி கொண்டு

அவளின் பாதங்களை தேய்த்து கொள்கின்றாள்...

யார் தேவதை?

உன்னை பெற்றவளா?

இல்லை

நீ பார்த்தவளா!?

8482 total views