தீவிர அரசியலில் இறங்கினார் கமல்.... ரஜினி, கமல் யார் முதல்வர்?... பிரபல ஜோதிடரின் கணிப்பு இதோ

Report
433Shares

நடிகர் கமல்ஹாசன் அரசியல் இறங்குவதாக கூறியது தற்போது உறுதியாகியுள்ளது. ஜனவரி 26ம் திகதி தீவிர அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வரும் 18ம் திகதி வெளியிடப்படும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்தும் அரசியலில் இறங்கியுள்ளது அனைவருக்கும் தெரிந்த விடயமே...

இவர்கள் இருவரில் தமிழக முதலமைச்சராகும் யோகம் யாருக்கு என்பது பற்றி பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி கணித்துள்ளார்.

சேலத்தில் உலக தமிழ் ஜோதிடர் மகாஜன சபை தலைவர் ஆதித்ய குருஜி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, வருகிற 2019ம் ஆண்டிற்கு பின் தமிழகத்தில் மிகப்பெரிய அமைதி நிலவும்.

அதுவரைக்கும் அரசியல் உட்பட அனைத்திற்கும் தற்போது குழப்பம் நீடித்து வரும். ரஜினிகாந்த் ஜாதகத்தை பொறுத்தவரை அவர் தனியாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து நடத்தும் சாத்தியக்கூறு உள்ளது.

அதே நேரத்தில் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது, மக்கள் எதிர்பார்க்காத ஒருவர் தமிழக முதலமைச்சராக வாய்ப்புள்ளது. ஒருவேளை அது நடிகர் கமல்ஹாசனாக கூட இருக்கலாம். காலம்தான் பதில் சொல்லனும் என்று தெரிவித்துள்ளார்.

19284 total views