அம்மாடியோ!! ஒரு லட்சம் டாலர் பணத்தை விழுங்கியதா இந்த பாம்பு?

Report
119Shares

நைஜீரியாவில் ஒரு லட்சம் டாலர்களுக்கு சமமான பணத்தை பாம்பு விழுங்கிவிட்டதாக தணிக்கைக் குழுவிடம் கூறுகிறார் ஊழியர் ஒருவர்.

உண்மை என்றால், பாம்பு குறைந்தபட்சம் 36,000 நோட்டுகளை சாப்பிட்டிருக்க வேண்டும்

நைஜீரியாவில் பெரிய தொகை காணாமல் போனதை பற்றி ஓர் அசாதாரண விளக்கத்தை கூறிய பள்ளி தேர்வு வாரிய ஊழியர் ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு லட்சம் டாலர்களுக்கு சமமான 36 மில்லியன் நைரா அளவிலான பணத்தை பாம்பு விழுங்கிவிட்டதாக ஃபிலோமினா ச்சிசே என்ற ஊழியர் தணிக்கைக் குழுவிடம் கூறியதை அதிகாரிகள் நிராகரித்தனர்.

தேர்வு கட்டணம் வசூலிக்கும் எழுத்தராக பணியாற்றும் ஃபிலோமினா ச்சிசே நைஜீரிய தேர்வுக் வாரியத்தின் அலுவலகத்தில் பணிபுரிபவர்.

ஃபிலோமினா ச்சிசே கூறியதை நிராகரித்த தேர்வு குழு சேர்க்கை மற்றும் மெட்ரிகுலேஷன் கூட்டு வாரியம், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக பிபிசியிடம் கூறியது.

சமூக ஊடகங்களில் இந்த சம்பவத்தை நைஜீரிய மக்கள் கேலி செய்தனர்.

5846 total views