24 மணிநேரமும் வீடியோ கேம் ஆடிய இளம்பெண்.! இதன் விளைவு என்ன தெரியுமா?

Report
108Shares

சீனாவில் இளம் பெண் ஒருவர் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி உள்ளார். இதனால் தொடர்ச்சியாக 24 மணிநேரமும் வீடியோ கேம் விளையாடியுள்ளார்.

இடைவெளியின்றி தொடர்ச்சியாக செல்போனை பார்த்ததால் இந்த பெண் தற்போது அவர் பார்வையை இழந்துள்ளார்.

நிதி நிறுவனத்தில் பணிபுரியும் இந்த பெண் தொடர்ச்சியாக செல்போனில் கேம் விளையாடுவதை பழக்கமாக கொண்டுள்ளார். மேலும் விடுமுறை நாட்களிலும் காலை 6 மணிக்கே எழுந்து கேம் ஆட தொடங்கி இரவு முழுவதும் விளையாடி இருக்கிறார்.

தொடர்ச்சியாக கேம் விளையாடுவதையே வாடிக்கையாக கொண்ட இந்த பெண்ணுக்கு தற்போது கண்பார்வை போய்விட்டது. இந்நிலையில் இந்த பெண்ணின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் தற்போது போராடி வருகின்றனர்.