இன்னும் கொஞ்சம் வாழவேண்டும் - மகனிற்காக உருகும் தாய்

Raju
Report Raju in ஏனைய நாடுகள்
89Shares

புற்றுநோய் பாதிப்பால் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் சிறுவனின் வாழ்நாட்களை நீடிக்க வைக்க அவன் தாய் நிதி உதவி கோரியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் Albino. தொழிற்சாலையில் தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார். இவர் மனைவி Marissa. இவர்களின் மகன் John Marvin (8).

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இந்த குடும்பத்தினரின் வாழ்க்கையில் கடந்த வருடம் யூலை மாதம் புயல் வீச தொடங்கியது.

பள்ளிக்கூடத்தில் இருந்த போது John வகுப்பறையில் வாந்தி எடுத்துள்ளான். இதையடுத்து மருத்துவமனைக்கு பெற்றோர் அவனை அழைத்து சென்றனர்.

John-ஐ பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

அதன் பிறகு மீண்டும் அவன் உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து Cavite மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் John உடல் பரிசோதனை செய்யப்பட அவன் உடலில் Lymphocytic Leukemia ரக புற்றுநோய் உருவாகியுள்ளது தெரியவந்தது.

அதன் பிறகு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை Johnக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுவனுக்கு Chemotherapy சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து அந்த சிகிச்சையும் John-க்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

Chemotherapy சிகிச்சையின் அடுத்த பகுதி வரும் 27ஆம் திகதி மேற்கொள்ளபடவுள்ளது. இதை ஒரு முறை செய்ய ஒரு லட்சத்துக்கு மேல் செலவாகும் என தெரிகிறது.

இது குறித்து Johnன் தாய் Marissa கூறுகையில், என் மகன் இன்னும் சில வாரங்களோ அல்லது மாதங்களோ தான் உயிருடன் இருப்பான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

John அதிக நாட்கள் வாழ அவன் சிகிச்சைக்கு உதவ மக்கள் முன் வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.