விமானத்தில் தொடர்ந்து குசு விட்ட நபர்: அவசரமாக தரையிறக்கிய விமானி

Report
4174Shares

பறக்கும் விமானத்தில் கட்டுப்பாடின்றி தொடர்ந்து குசு விட்ட பயணியால், விமானத்தை பாதி வழியில் அவசரமாக தரையிறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இருந்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகருக்கு Transavia விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

இந்த நிலையில் அதில் ஒரு பயணி கட்டுப்பாடின்றி தொடர்ந்து வாயு(Fart) வெளியிட்டவாறு இருந்துள்ளார்.

இது அவருக்கு அருகாமையில் இருந்து இரு பயணிகளுக்கு மட்டுமின்றி ஒட்டு விமான பயணிகளுக்கும் சங்கடமாக அமைந்துள்ளது.

பலர் விமான பணிப்பெண்களிடம் குறித்த நபர் தொடர்பில் புகார் அளித்தவண்ணமே இருந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த குசு விவகாரம் விமானியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விமானி தொடர்புடைய நபரை எச்சரித்துள்ளார். இருப்பினும் அவரால் கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து குசு விட்டவண்ணமே இருந்துள்ளார்.

இதனிடையே பயணிகள் சிலர் அந்த நபரிடம் சண்டைக்கு சென்றுள்ளனர். பிரச்னை பெரிதாகும் என்ற நிலை தெரிந்ததும் விமானி குறித்த விமானத்தை அவசரமாக வியன்னா விமான நிலையத்திற்கு திருப்பியுள்ளார்.

இதனையடுத்து விமானத்தில் சண்டையிட்டதாக கூறி 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை வியன்னா விமான நிலைய பொலிசார் கைது செய்துள்ளனர்.

சட்டத்துக்கு புறம்பாக எதையும் செய்யாத எங்களை விமானத்தில் இருந்து வெளியேற்றி கைது செய்துள்ளது எந்தவகையில் நியாயம் என புரியவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் முறையிட்டுள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் 4 பேரையும் வியன்னா பொலிசார் விடுத்திருந்தாலும், Transavia விமானத்தில் பயணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளனர்.

131765 total views