மண்பானை ருசியும்... மீன் குழம்பும்...!

Published:Monday, 19 June 2017, 22:29 GMTUnder:General

தமிழர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கிய ஆதாரம் பாரம்பரிய உணவு முறை. இந்த பாரம்பரிய உணவு முறையில் பிரதான இடம் வகித்தது மண்பானை சமையல்தான்.

தாகம் தீர தண்ணீர் குடிப்பதிலிருந்து, சமைத்து முடிப்பது வரை வீடுகளில் சமையல் அடுக்குகளை நிரப்பியவை மண் பானைகள்தான். ஆனால் இன்று மண்பானைகள் அருங்காட்சியகங்களை அடையாளப்படுத்தும் ஒரு பொருளாகிவிட்டது வேதனைக்குரிய விஷயம்.

மண்பானைகளின் இடத்தை எவர் சில்வர், அலுமினியம், நான் ஸ்டிக் பாத்திரங்கள் இடம் பிடித்துவிட்டன.

"மண் பானை சமையலை சிலாகிக்கிற பலருக்கும் எதனால் அதற்கு சுவை கூடக்கிடைக்கிறது என்பது தெரியாது.

சமைக்கிற உணவு மேல அடுப்புத் தீ (வெப்பமானது) சீராகவும், மெதுவாகவும் பரவுறதுனால அடி பிடிக்காது. மண்பானையிலுள்ள நுண்ணிய துளைகள் மூலமா காற்றும், நீராவியும் ஒரே சீராக ஊடுருவும்.

பானையில சமைக்கப்படுற உணவுகள் ஆவியில் வேக வைத்த தன்மையிலேயே இருக்கும்.

இதனால உணவிலுள்ள சத்துக்கள் பாதுகாக்கப்பட்டு, சீக்கிரமே செரிமானமாகிவிடும். உணவிலுள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை மண்பானைக்கு இருக்குது. மண்பானையில சமைச்சா அதிக எண்ணெய் செலவாகாது.

இது எதுவும் இன்றைக்கு நாம பயன்படுத்துற பாத்திரங்கள்ல கிடையாது.

மண் பானை சமையலைச் சாப்பிட்டுத்தான் அந்த காலத்துல ரொம்ப ஆரோக்கியமா நோய், நொடி இல்லாம இருந்தாங்க. அந்தக்காலத்தில சர்வசாதாரணமா 5, 10 குழந்தைகளை சுலபமா பெற்று கொண்ட சூட்சுமம் இதுதான்.

இப்போவும் 'மண்பானை சமையல்' , 'அம்மியில் அரைச்ச மசாலா குழம்பு' ன்னு ஹோட்டல்கள்ல போர்டு வெச்சிருக்காங்க. என்னதான் இருந்தாலும் அந்தக் காலத்து மண்பானை சமையலுக்கு ஈடாகாது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்