கொஞ்சம் குண்டான மாதிரி இருக்கா? தொப்பை போடுதா? அப்போ இது உங்களுக்கு தான்!

Published:Monday, 19 June 2017, 13:29 GMTUnder:Living

தொப்பை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் என்ன?
  • சிறிய வேலை செய்யும் போது கூட அதிக வேலைகளை செய்து முடித்ததை போல அடிக்கடி உடல் சோர்வு நிலை ஏற்படும். இது எடை அதிகரிக்கிறது என்பதற்கான முதல் அறிகுறி.
  • அடிக்கடி பசி எடுப்பதால், ஏதாவது நொறுக்கு தீனி அல்லது தின்பண்டங்களை சாப்பிட தோன்றும். ஆனால் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி கட்டுப்படாமல் இருக்கும். இது உடல் பருமன் அதிகரிப்பதற்கான இரண்டாவது அறிகுறி.
  • உடலில் திடீரென்று ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்தல் மற்றும் ரத்தக்கொதிப்பு பிரச்சனைகள் ஏற்பட்டால், அது அது உடல் எடை அதிகரிப்பதற்கான சரியான அறிகுறி.
  • உடல் எடையை விட இடுப்பின் சுற்றளவை எளிதில் கவனிக்க முடியும். எனவே உங்கள் இடுப்பின் சுற்றளவு அதிகமாக உள்ளதை போன்று தெரிந்தால், அது உடல் எடை அதிகரிப்பிற்கான அறிகுறி.
  • கால் மூட்டுகள் மற்றும் முதுகு எவ்வித காரணமின்றி, அடிக்கடி வலி ஏற்பட்டால், அது உடல் எடை அதிகரிக்கிறது என்று அர்த்தம்.
  • சிறிது தூரம் நடக்கும் போது அல்லது சில படிக்கட்டுகள் எறி, இறங்கும் போது மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால், அது உடல் பருமன் அதிகரிக்கிறது என்று அர்த்தம்.
  • இரவில் அதிகமாக குறட்டை பிரச்சனை ஏற்பட்டால், அது உங்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கிறது என்று நினைவூட்டும் அறிகுறியாகும்.
  • சாதாரணமாக தோலின் இறுக்கம் குறைந்து, சதைகள் தொங்க ஆரம்பிக்கும். இது போன்று சதைப்பிடிப்புகளில் இறுக்கம் குறைவது, உடல் எடை அதிகரிக்கிறது என்பதற்கான முக்கிய அறிகுறி.
  • கால் பாதங்களில் எவ்வித காரணமின்றி, வெடிப்புகள் தோன்றினாலே, உங்கள் உடல் பருமன் அதிகரிக்கிறது என்று அர்த்தம்.
Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்