நீங்கள் குண்டா? ஒல்லியா? குள்ளமா? கவலையை விடுங்க.. இதை மட்டும் செஞ்சி பாருங்க!!

Published:Monday, 19 June 2017, 11:41 GMTUnder:Living

உடை என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு விடயம். அதை நாம் எந்த விதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து நம் மீதான வசீகரத்தை கூட்ட முடியும்.

இது ஆண்கள் பெண்கள் இருவருக்குமே பொருந்தும். உடை விடயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் உடல்வாகிற்கு எது பொருந்துமோ அந்த வகையான உடைகளையே தேர்வு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காகப் பொருத்தமில்லாத உடைகளை அணிந்து மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நடந்து கொள்ளக்கூடாது.

சரியான உடைகளைத் தேர்வு செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள மைனஸ்களைப் பிளஸ்களாக மாற்றலாம்.

குண்டாக இருப்பவர்கள்

இவர்களுக்குத் தாங்க இருப்பதிலேயே ரொம்பச் சிரமம், எந்த உடை அணிந்தாலும் திருப்தி இல்லாமலே இருப்பாங்க. அதற்குக் காரணம் தங்கள் அதிகப்படியான சதைகள் தான்.

உடற்பயிற்சி அது இதெல்லாம் இருந்தாலும் நாம் உடையின் மூலம் எவ்வாறு ஓரளவு சரி செய்யலாம் என்று பார்ப்போம். குண்டாக இருப்பவர்கள் கண்டிப்பாக ரொம்ப வழுவழுப்பான உடைகளைத் தேர்வு செய்யவே கூடாது.

காரணம், அவ்வகையான உடைகள் உடலோடு ஒட்டி உடல் பாகங்களை வெளிப்படையாகக் காட்டும். குறிப்பாக மார்பு, இடுப்பு மற்றும் பின்புறம், இது பார்ப்பவர்களுக்கு ஒரு வெறுப்பையே தரும்.

இவ்வைகையான ஆடைகளை முற்றிலும் தவிர்த்து விடுதல் நலம், இல்லைங்க எனக்கு இந்த மாதிரி துணி தான் பிடிக்கும் என்றால், இருப்பதிலேயே குறைந்த அளவு வழுவழுப்பான உடைகளைத் தேர்வு செய்யுங்கள்.

காட்டன் வகை உடைகள் சிறந்தது. ஏங்க! எனக்கு என்ன வயசா ஆகிடுச்சு! காட்டன் புடவை எல்லாம் கட்ட!! என்றால் காட்டன் புடவைகளிலேயே பல வகை உண்டு என்பது உங்களுக்குத் தெரியும், எனவே அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.

குள்ளமாகக் குண்டாக இருப்பவர்கள்

இவர்களும் வழுவழுப்பான உடைகளைக் கண்டிப்பாகத் தவிர்த்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை.இவ்வகை உடைகள் இன்னும் உயரம் குறைந்தவர்களாகக் காட்டும்.

பெண்களுக்கு மிக முக்கியமான அம்சம் குறிப்பாகக் குள்ளமாக இருப்பவர்களுக்கு ஷோல்டர் அகலமாக இருப்பது, உங்கள் ஷோல்டர் அகலமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு ஷோல்டர் அகலம் குறைவாக இருக்கும்.

அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி காட்டன் புடவைகள் தான். இவைகள் தான் உங்கள் சோல்டரை மறைத்து அகலப்படுத்திக் காட்டும். அதோடு காட்டன் புடவை என்பதால் சதை பகுதிகளை அப்பட்டமாகக் காட்டாது.

பெண்கள் சுடிதார் அணியும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் தொள தொளன்னு அணியக் கூடாது குறிப்பாகக் குள்ளமாகக் குண்டாக உள்ளவர்கள். அதே போல ரொம்ப இறுக்கமாகவும். இடுப்புப் பகுதியில் அளவு குறைத்து ஓரளவாவது ஸ்ட்ரக்சர் கொண்டு வரும் படி இருக்க வேண்டும்.

ரொம்ப இறுக்கமாகவும் இருந்தால் பின்புறம் அசிங்கமாகத் தெரியும். எனவே, இடை பகுதியில் கவனமெடுத்து சுடிதார் அணிய வேண்டும்.

ஒல்லியாக உள்ளவர்கள்

ஒல்லியாக உள்ளவர்கள் ரொம்ப மெல்லிய உடையைத் தவிர்க்க வேண்டும், இவை உடலை குச்சி குச்சியாகக் காட்டும். எலும்புகள் துருத்திக்கொண்டு அசிங்கமாக இருக்கும். சுடிதார் அணியும் போது கையின் அளவு ரொம்பக் குறைவாக வைக்கக் கூடாது.

இது உங்களின் நீண்ட கைகளை (ஒல்லியாக இருப்பதால்) இன்னும் நீண்டதாகக் காட்டும். தேர்வு செய்யும் உடை திக்கான உடையாகப் பார்த்துக்கொள்வது நல்லது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்