ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞன்.. 3 வினாடிகளில் உயிரிழந்த பரிதாபம்.. காரணம் தான் என்ன!!

Published:Monday, 19 June 2017, 10:13 GMTUnder:General

ஜிம்மில் உடற்பயிற்சி செய்த 17 வயது இளைஞன் சில வினாடிகளிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், நாசி பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞன் அங்குள்ள ஜிம்மில் தரையில் கைகளை ஊன்றி உடற்பயிற்சி மேற்கொண்டார். பயிற்சி முடித்தபின் எழுந்து நின்று ஓய்வு எடுத்த அவர் முன்றே வினாடிகளில் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார்.

உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் பிரேத பரிசோதைக்கு பின்னரே மரணத்திற்கான உண்மை கண்டறிய முடியும் என்று கூறியுள்ளனர்.

உடற்பயிற்சி கூடங்களில் ஸ்டீராய்டு ஊசி போடப்படுவதே மாரடைப்பு வர காரணம் என்று பரவலாக கூறப்படும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்