சினிமாவில் அடிக்கடி கேட்டு புளித்துபோன 10 வசனங்கள்

Published:Monday, 19 June 2017, 07:54 GMTUnder:Entertainment

தமிழ் சினிமாவில் சில  வசனங்கள் ஒரே மாதிரி வந்து மனப்பாடமாகி விட்டன. இன்னும் வந்து விரட்டியபடி இம்சை பண்ணுகிறது இது போன்ற வசனங்கள். 

1. வில்லன் தனது ஆட்களிடம், 'எட்றா வண்டியை'.

2. ஹீரோ வில்லனிடம்,  'இங்க ஒரு தலை விழுந்தா அங்க பத்து தலை விழும்'.

3 போலீஸ் அதிகாரி, 'என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ தெரியாது, இன்னும் அரை மணி நேரத்துல அவனை பற்றிய டீட்டெய்ல்ஸ் எனக்கு வந்தாகணும்'.

4. ஹீரோயின் பற்றி நண்பர்களிடம் ஹீரோ, ' அங்க நின்னு அவ என்னை திரும்பி பார்ப்பா பாரேன்'.

5. தோழி ஹீரோயினிடம், 'யார்டி அவன்? உன்னையவே பார்த்துட்டு இருக்கான்'.

6. ஹீரோ, வில்லனிடம், 'போட்டுத்தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்'.

7. ஹீரோயினுக்கு உதவும் தோழி அல்லது பெண்: 'ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்'.

8. ஹீரோ, ஹீரோயினிடம், 'உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடி'.

9. அம்மா கோயிலில், 'சாமி பேருக்கே அர்ச்சனை பண்ணிருங்க'.

10. ஹீரோ நண்பனிடம் கண்ணீர்விட்டபடி, 'உன்னை விட்டா எனக்குன்னு யார்ரா இருக்கா?
Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்