விமான பயணங்கள் பற்றி... முக்கியமான ஒரு ரகசியம் தெரியுமா?

Published:Sunday, 18 June 2017, 03:44 GMTUnder:General

தற்போதைய காலத்தில் விமானம் பயணம் என்பது ஜாலி என்று சொல்லும் அளவிற்கு நம்மில் பலர் இருக்கிறார்கள். இந்த பயணம் அதிக பாதுகாப்பு கொண்டது என்றாலும், அதில் சில கூறப்படாத ரகசிய தகவல்கள் நிறைய உள்ளது.

விமான பயணங்கள் பற்றிய ரகசியங்கள் என்ன?

விமான பயணத்தில் முதலில் அச்சம் கொள்ளும் உணர்வு என்றால், அது டேக் ஆஃப் தான். ஏனெனில் விமானம் டேக் ஆஃப் ஆகும் போது, நீங்கள் கீழே விழுந்து கொண்டு இருப்பது போல தோன்றும்.

விமானங்களை நாம் முதல் முறையாக பார்க்கும் போது, அது மிகவும் சுத்தமாக இருப்பது போல தெரியும். ஆனால் உண்மையில், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் பல அசுத்தங்கள் தினமும் ஏற்படுகின்றது. பயணிகளின் எண்ணிக்கை மூலம் விமானத்தின் அனைத்து இடங்களிலுமே அசுத்தங்கள் மற்றும் கிருமிகள் பரவி இருக்கின்றது.

விமானத்தில் திடீரென்று எமெர்ஜென்சி கதவு திறந்து கொண்டால், நீங்கள் கதவிற்கு தூரமாக இருந்தால், அவ்வளாவு தான் நமது கதை முடிந்துவிடும். அதுவே கதவோடு கதவு ஒட்டிக்கொண்டு இருக்கும் போது, கீழ் நோக்கி விமானம் பாய்ந்தால் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது.

விமானிகள் அனைவரும் எப்போதும் விமானத்தில் கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவதில்லை. ஏனெனில் பெரும்பாலான நேரங்களில் விமானங்களில் உணவு என்பது சுகாதாரமாக இருப்பதில்லை. அதனால் விமானிகளுக்கு எப்போதும் சிறப்பு உணவுகளே தரப்படும்.

விமானங்களில் அதிகபட்சமாக ஆக்சிஸன் மாஸ்குகள் 15 நிமிடங்களே தாக்கு பிடிக்கும். காரணம் விமான வழிப்பாதையில் கோளாறு என்றால் விமானி 15 நிமிடங்களுக்குள் விமானத்தை தரையில் இறக்கி விடுவார்கள்.

காக்பிட்டில் தூங்கும் விமானிகள் சில ஆய்வுகளின் படி, பல விமானிகள் காக்பிட்டில் இருக்கும் போதே தூங்கி விழுவார்களாம். பிறகு சுதாரித்துக் கொண்டு விமானத்தை இயக்குவார்களாம். இதற்கு காரணம் அவர்களது பனிச்சுமையே.

அனைத்து ரக விமானங்களிலும் உள்ள எஞ்சின் அதிக ஆயுட் காலம் கொண்டதாக இருக்கும். சில பழமையான எஞ்சின்கள் தான் அவ்வப்போது கோளாறுகளை ஏற்படுத்தும். அதுவே விமானத்தில் கோளாறு என்றால், அதை விமானிகள் பயணிகளுக்கு தெரியப்படுத்த மாட்டார்களாம்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்