ரஜினியை நம்பி Investment பண்ணதெல்லாம் போச்சே - ரஜினி ரசிகரின் அதிர்ச்சி பேட்டி

Published:Saturday, 20 May 2017, 01:05 GMTUnder:Celebrity

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரை சுற்றி பல வருடங்களாக அரசியல் சாயம் சுற்றி வருகிறது.

சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினிகாந்த் தனது ரசிகர்களிடம் பேசுகையில், சூழ்நிலையால் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இருப்பவர்களை அருகில் வைத்துக்கொள்ள மாட்டேன் என்றார்.

இதுகுறித்து பல கருத்துக்கள் சமூகவலைதளங்களிலும் உலாவரும் நிலையில், ரஜினி ரசிகர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ரஜினி அரசியலுக்கு வருவார் என நம்பித்தான் இத்தனை வருடம் போஸ்டர், கட்அவுட், பாலாபிஷேகம் என நாங்கள் முதலீடு செய்தோம். கடைசியில் ரஜினி இப்படிப் பேசியது எங்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது என்று கூறி மற்ற ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்