கல்யாணம் பண்ண கையோடு கருமாதி பண்ண வச்சுடாதம்மா! ஆசையால் வந்த ஆபத்து

Published:Friday, 19 May 2017, 22:38 GMTUnder:General

சீனாவை சேர்ந்த மணப்பெண் ஒருவர் வித்தியாசமாக புகைப்படம் எடுக்க விரும்பி தன்னுடைய உடையை தீயால் பற்றவைத்துக்கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலுமே ஒரு முக்கிய நாள். இந்நாளை மறக்கமுடியாத மகிழ்ச்சியான நினைவு சின்னமாக மாற்றுபவை திருமணத்தின்போது எடுக்கப்படும் புகைப்படங்களே.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் பல்வேறு சாகச செயல்களையும் செய்து வித்தியாசமான புகைப்படம் எடுக்கவே பலர் விரும்புகின்றனர்.

இவ்வாறு வித்தியாசமாக புகைப்படம் எடுக்க விரும்பிய சீனாவை சேர்ந்த மணப்பெண் ஒருவர் தன்னுடைய உடையில் போட்டோகிராபரைக் கொண்டு தீயை பற்ற வைத்துவிட்டு புகைப்படம் எடுக்க விரும்பியுள்ளார்.

இதையடுத்து, மணப்பெண்ணின் கவுனில் தீ பற்றவைக்கப்பட்டுள்ளது. ஆனால் புகைப்படம் எடுப்பதற்குள் தீ மள மளவென பரவி, மணப்பெண்ணின் உடை முழுவதும் பற்றி எரியத்தொடங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக புகைப்படம் எடுப்பதை நிறுத்திவிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இச்செயலால் மணப்பெண்ணின் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இறுதியாக மணப்பெண் விரும்பியவாறே அது மறக்கமுடியாத ஒரு நாளாக அமைந்துவிட்டது. ஆனால் கணம் தப்பியிருந்தாலும், அப்பெண் தன்னுடைய உயிரையே அதற்கு விலையாக கொடுக்க நேரிட்டிருக்கும் என்பதுதான் இதில் சோகம்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்