அறுவை சிகிச்சையின் போது பெண்ணை நிர்வாணப்படுத்தி படமெடுத்த மருத்துவர்கள்

Published:Friday, 19 May 2017, 18:03 GMTUnder:Crime

இந்தியாவில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது மயக்கத்தில் இருந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை, பிவாண்டியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட பெண் பிவாண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பெண்ணை சோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்நிலையில், அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து சென்ற மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுத்து பெண்ணை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து ரசித்துள்ளனர்.

மயக்கத்தில் இருந்த பெண் அதை தடுக்க முடியாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, சிகிச்கைக்கு பின் அறுவை சிகிச்சை அறையில் நடந்தது குறித்து தன் கணவரிடம் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்க, இச்செயலில் ஈடுபட்ட இரண்டு மருத்துவர்கள், செவிலியர் உட்பட மூன்று பேர் மீதும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வழக்குகளில் பிவாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்