பிரபல சினிமா நடிகை மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!!

Published:Thursday, 18 May 2017, 04:32 GMTUnder:Celebrity

பிரபல இந்தி திரைப்பட நடிகை ரீமா லகு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களாக இருக்கும், சல்மான் கான், ஷாருக்கான், சஞ்சய் தத் ஆகிய நடிகர்கள் நடித்த பல படங்களில் அவர்களின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரீமா லகு (59).

இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சில மணிநேரங்களுக்கு முன்னர் ரீமா லகு மரணமடைந்தார்.

இந்தியில் மாமியார், மருமகள் சண்டையை நகைச்சுவையாக சித்தரிக்கும் Tu Tu Main Main தொலைகாட்சியில் மாமியாராக நடித்த ரீமாவுக்கு ரசிகர்களிடத்தில் நல்ல பெயர் கிடைத்தது.

இந்த தொடர் பின்னாளில் தனியார் தமிழ் தொலைகாட்சியில் பாமா விஜயம் என டப் செய்து பிரபலமான தொடராக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்