தெளிவாக மாறியது சீனாவின் மஞ்சள் ஆறு- உல்லாச பிரயாணிகளுக்கு விருந்து

Published:Wednesday, 26 April 2017, 19:46 GMTUnder:General

வட சீனாவின் ஷான்க்சி மாநிலத்திலுள்ள ஹுக்கோ நீர்வீழ்ச்சினால் அங்குள்ள மஞ்சள் ஆறின் ஒருபகுதி தெளிவாக மாறியுள்ளது.

மஞ்சள் ஆறைப் பார்வையிடுவதற்காக வரும் உல்லாசப் பிரயாணிகளுக்கு இது பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

வழமையாக ஏப்ரில் மாதத்திலிருந்து ஜூன்வரையான காலப் பகுதியில் சிறிய நீர்வீழ்ச்சிகள் அதிகமாக இல்லாத காரணத்தால் மஞ்சள் ஆறில் நீர்மட்டம் குறைவாகவே காணப்படும்.

இந்தக் காலப்பகுதியில் மஞ்சள் நிறத்தைத் தோற்றுவிக்கும் மணல் குவியல்கள் ஆற்றங்கரையில் தங்கிவிடுவதால் தெளிவான நீர் முதன்மை நீர்வீழ்ச்சியான ஹூக்கோவில் பாய்வதை உல்லாசப் பிரயாணிகள் தெளிவாக பார்க்கமுடிகிறது

இந்த நீர்வீழ்ச்சி மஞ்சள் ஆறில் பாயும் நீர்வீழ்ச்சிகளிலேயே மிகவும் பெரியது. மேலும் சீனாவிலுள்ள இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சியும் இதுவாகும்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்