மர்மமான முறையில் மரணமடைந்த வடிவேலு : பரபரப்பு வாக்குமூலம் கொடுத்த கள்ளக்காதலி

Published:Friday, 21 April 2017, 19:28 GMTUnder:General

தமிழகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ரியல் எஸ்டேட் அதிபர் வழக்கில் அவரது கள்ளக்காதலி உட்பட மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தின்னூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கடந்த மாதம் 4ம் திகதி நபர் ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 45 வயது மதிக்கத்தக்க குறித்த நபரின் பெயர் வடிவேல் என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.

இவரது சாவில் மர்மம் இருப்பதாக வடிவேலுவின் மனைவி தேன்கனிக்கோட்டை பொலிசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் வடிவேலுவின் கள்ளக்காதலி, இவருடைய தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் அடித்து கொலை செய்தது தெரியவந்தது

இவர்களை கைது செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர், இதுகுறித்து பொலிசார் கூறுகையில், சந்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சாக்கப்பா(வயது 73), இவருடைய மகன் பிரேம்குமார்(வயது 45), மகள் முனிலட்சுமி(வயது 30).

முனிலட்சுமிக்கும், வடிவேலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது, இந்நிலையில் முனிலட்சுமி தனது அக்காள் மகளுக்கு வேலை வாங்கி கொடுக்குமாறு வடிவேலிடம் ரூ.2 லட்சத்தை கொடுத்துள்ளார்.

ஆனால் அவர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார், இதில் இருவருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது, இதற்கிடையே வடிவேலுவின் பணத்தை சுருட்ட முனிலட்சுமி திட்டமிட்டுள்ளார்.

இதன்படி ஆசை வார்த்தை கூறி வடிவேலுவை அழைத்து வந்த முனிலட்சுமி, தந்தை மற்றும் அண்ணனுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளார்.

கொலையை மறைக்க தற்கொலை செய்து கொண்டது போல் செட்அப் செய்து தலைமறைவாகிவிட்டனர், பெங்களூர் செல்லும் வழியில் மடக்கிபிடித்ததாக பொலிசார் கூறியுள்ளனர்.

இவர்கள் மூவரையும் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்