தமிழ் விளம்பரங்களையும் வச்சி செய்த மெட்ராஸ் சென்ட்ரல்: செம்ம கலாய் வீடியோ

Published:Friday, 21 April 2017, 18:10 GMTUnder:General

தமிழ் யூட்யூப் ரசிகர்களின் பேரபிமான நட்சத்திரமாய் உருவெடுத்திருக்கிறார் கோபி.

மெட்ராஸ் சென்ட்ரல்' யூ ட்யூப் சேனலின் அங்கமான கோபி..சீமான் மற்றும் வைகோ போல மிமிக்ரி செய்து பெரும் வரவேற்பை பெற்றார்.

அவ்வப்போது சீனியர் ஆர்.ஜெ மற்றும் இதர தரப்பினர் யூட்யூப் தளத்தில் வந்து சென்றாலும் தொடர்ந்து தாக்குப்பிடிக்க சிரமப்பட்டனர். பிறகு தரமான தயாரிப்பு வேல்யூ துணையுடன் புட் சட்னி & கோ டாப்பில் இருந்தது.

சித்தார்த் நடித்த ஜில் ஜங் ஜக்கிற்காக இவர்கள் செய்த ப்ரமோ வீடியோ சூப்பர் ஹிட்.

அடுத்து ஆர்.ஜே. விக்னேஷ் & கோவின் ஸ்மைல் சேட்டை தனது தைரியமான அரசியல் நையாண்டி வீடியோக்கள் மூலம் உள்ளூர் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது.

தற்போது இவர்களை விட அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது மெட்ராஸ் சென்ட்ரல் டீம். அதற்கு மிக முக்கிய காரணம் கோபியின் பலகுரல் திறமை. பேங்க் அதிகாரி, கரும்பு வியாபாரி என சாமான்யர்களைப்போல நடிப்பதிலும் கில்லி.

இந்த அணியின் அடுத்த மோஸ்ட் வான்டட் நாயகர் துனியா சுதாகர். தேவையான தேக்கரண்டி அளவு எனர்ஜியை செலவு செய்து போதுமான சிரிப்பை வரவழைப்பதில் வல்லவர்.

வாசகர்களின் வீடியோ/எழுத்து விமர்சனங்களை பார்த்தும், படித்தும் இவர்கள் ரகளை செய்யும் சுஹானுபவம் நிகழ்ச்சி இன்னொரு அட்ராசிட்டி.

பலரின் வழக்கமாக இருப்பது ராண்டம் முறையில் யூ ட்யூப் சேனல்களை பார்ப்பது தான். ஆனால் கோபியின் அரசியல் மேடைப்பேச்சுகளை பார்த்ததில் இருந்து மெட்ராஸ் சென்ட்ரல் வீடியோக்களை அவ்வப்போது பார்த்தாக வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளார்கள்.

இவர்கள், தமிழ் விளம்பரங்களை வைத்து செய்த லூட்டியை நீங்களே பாருங்கள்

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்