வாழைப்பழ டயட் பற்றி தெரியுமா? எப்படி கடைபிடிக்க வேண்டும்

Published:Friday, 21 April 2017, 17:10 GMTUnder:General

நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பழ வகைகளில் முக்கியமானது முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம்.

இது உடல் எடையை குறைத்து உடல் வலிமை அடையச் செய்கிறது. இதற்கு வாழைப்பழ டயட் என்று பெயர்.

வாழைப்பழ டயட்டை எப்படி பின்பற்ற வேண்டும்?

ஒரு நாளைக்கு 10-12 வாழைப்பழங்கள் மற்றும் 3 லிட்டர் தண்ணீர் ஆகிய இரண்டையும் மட்டுமே உணவாக 12 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். பின் இந்த டயட் முறையுடன், தினமும் உடற்பயிற்சிகள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்குமாம். ஒவ்வொரு நாட்களும் முக்கியமாக நமது உடம்பிற்கு தேவையான ஓய்வினை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

வாழைப்பழ டயட்டினால் கிடைக்கும் நன்மைகள்

வாழைப்பழம் மற்றும் தண்ணீரை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளும்போது மனது புத்துணர்ச்சி அடைவதுடன் உடல் எடையும் குறைகிறது. மேலும் நமது சருமத்தை எப்போதும் மென்மையாக மற்றும் பளபளப்பாக பாதுகாக்கிறது. தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிடுவதால், ஒரு நாளைக்கு 22 கி.மீ. தூரம் ஓடும் அளவிற்கு உறுதியான எனர்ஜி கிடைக்கிறது. இதனால் கால்களில் தசைகள் வலிமை அடைகிறது.

குறிப்பு

ஒரு நாளைக்கு 10-12 வாழைப்பழம் சாப்பிட்டதுடன், நமது வழக்கமான உணவுகளையும் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். உடனடியாக எடையை குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்போருக்கு இந்த டயட் மிகச் சிறந்தது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்