இதுக்கே ஷாக் ஆயிட்டா எப்படி..? முழுசா படிங்க..!

Published:Friday, 21 April 2017, 16:06 GMTUnder:General

பழமொழிகள் என்பது பொன்னான வாக்கியங்கள். ஆனால், அவை எல்லாம் எழுதியப்படி தான் உரைக்கிறோமா? என்பது தான் பெரிய கேள்விக்குறி.

ஆம், நாம் இன்று கேட்கும், பேசும் பழமொழிகள் பலவன வார்த்தைகள் மருவி பயன்படுத்திவரப்படுகின்றன. அவற்றில் சிலவன பற்றி இங்கே காணலாம்... இதை முழுசா படிச்சிட்டு  பாராட்டுவீங்களா..! திட்டுவீங்களா..? தொடர்ந்தும் படியுங்கள்..

01- பழமொழி- ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் செய்யலாம்.

உண்மை வாக்கியம் - ஆயிரம் பேருக்கு போய் சொல்லி திருமணம் நடத்தலாம்.

02- பழமொழி - ஆடி காற்றில் அம்மியும் பறக்கும்.

உண்மை வாக்கியம் - ஆடி காற்றில் அம்மையும் பறக்கும்.

03- பழமொழி - மண் குதிரையை நம்பி, ஆற்றில் இறங்காதே.

உண்மை வாக்கியம் - மங்கு திரையை நம்பி, ஆற்றில் இறங்காதே.

04-பழமொழி - சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

உண்மை வாக்கியம்-சோழியன் குடுமி, சும்மாடு ஆகுமா?

05 பழமொழி - களவும் கற்று மற

உண்மை வாக்கியம் - களவும் கத்தும் மற.

06- பழமொழி - ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்.

உண்மை வாக்கியம் -ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன்.

07 பழமொழி - அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.

உண்மை வாக்கியம் - அர்ப்பணித்து வாழ்ந்து வந்தால், அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.

08- பழமொழி - நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

உண்மை வாக்கியம்- நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு.

09- பழமொழி - குரைக்கிற நாய் கடிக்காது.

உண்மை வாக்கியம் - குழைகிற நாய் கடிக்காது. 1

10- பழமொழி-கல்லை கண்டால் நாயை காணோம், நாயைக் கண்டால் கல்லை காணோம்.

உண்மை வாக்கியம் - கல்லை கண்டால் நாயகனை காணோம், நாயகனை கண்டால் கல்லை காணோம்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்