ஜெ.வும் சசியும் அப்பல்லோவில் பேசிய பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ ரிலீஸ்..! திவாகரன் மகன் மிரட்டல்?

Published:Friday, 21 April 2017, 00:31 GMTUnder:General

அப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த ஜெயலலிதாவும், சசிகலாவும் உரையாடிய வீடியோ விரைவில் வெளிவரும் என திவாகரன் மகன் ஜெயானந்த் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் அடைந்து 5 மாதங்கள் ஆகிவிட்டாலும், அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவே பொதுமக்களால் இன்னும் பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா தாக்கப்பட்டு இறந்தார், பழச்சாறு கலந்து கொல்லப்பட்டார் என பல தகவல்கள் பரவுகின்றன.

இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் மகன் திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது பேஸ்புக் பக்கத்தில், கொலை பழி சமத்தியும் அம்மாவின் சிகிச்சை படத்தை வெளியிடவில்லை.

காரணம் பச்சை கவுன் உடையில் அம்மாவை எதிரிகள் பார்க்கக்கூடாது. இது தியாகத்தலைவி சின்னம்மாவின் செயல்.

சிங்கத்தை சிங்கமாகவே நாங்கள் அனுப்பி வைத்தோம். ஆனால், ஓபிஎஸ் ஓட்டுக்காக அம்மாவை பிண பெட்டியில் வைத்து ஓட்டு கேட்கிறார்

மருத்துவமனையில் உரையாடல்கள் வீடியோ வெளிவந்தால்...? ஓ.பன்னீர்செல்வம் இவர்களை என்ன செய்யலாம்...? அந்த நாள் மிக விரைவில்.. வரும். இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்