இந்த பெண்ணை திருமணம் செய்தால் 1,164 கோடி கிடைக்குமாம்!!. காரணம் கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!!

Published:Thursday, 20 April 2017, 08:17 GMTUnder:General

சில செய்திகள், சில அறிவிப்புகள் கேட்ட நொடியிலேயே நம்மை உலுக்கி எடுக்கும். அப்படிப்பட்ட செய்திகளில் ஒன்று தான் இது. சீனாவை சேர்ந்த பில்லியனர் செசில் சாவோ. இவர் ஹாங்காங்கில் ரியல் எஸ்டேட் மற்றும் பிராப்பர்டி டெவலப்மெண்ட் மூலமாக பெரும் பணக்காரராக திகழ்கிறார். நினைத்தால் எதையும் சாத்தித்து காட்டும் அளவிற்கு பணம் இருக்கும் இவரால் ஒன்று மட்டும் முடியவில்லை.

இவரது ஒரே மகள் ஓரினச்சேர்க்கையாளர். இவரை இதில் இருந்து மாற்றி, எவரால் திருமணம் செய்துக் கொள்ள முடியோ அவருக்கு தான் தலைப்பில் கூறியிருக்கும் பரிசு தொகை போய் சேரும்.


2012-ல்

2012-ல் தான் முதல் முறையாக செசில் சாவோ உலகை உலுக்கும் அளவிற்கு ஒரு தலைப்பு செய்தியை உருவாக்கினார். அப்போது இவர் தன் மகளை லெஸ்பியன் வகையில் இருந்து மாற்றும் ஆணுக்கு 60 மில்லியன் டாலர்கள் சன்மானம் என அறிவித்தார்.

எகிறி நிற்கும் பரிசு தொகை!

இந்த 60 மில்லியன் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே போனது. 2014-ல் 120 மில்லியன் டாலர்கள் ஆனது, இப்போது கடைசியாக 180 மில்லியன் டாலர்களில் வந்து நிற்கிறது. அதாவது ஏறத்தாழ இந்திய மதிப்பில் 1,164 கோடியே 15 லட்ச ரூபாய் ஆகும்.

கிகி!

செசில் சாவோவின் லெஸ்பியன் மகளான கிகி தனது தந்தை அறிவிக்கும் சலுகை மற்றும் சன்மானம் போன்றவற்றை மறுத்து வருகிறார். அவர் தனது லெஸ்பியன் துணையுடனே வாழ விரும்புகிறார்.

பொதுவெளி கடிதம்!

பொதுவெளியில் கிகி தனது தந்தை செசில் சாவோவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் செசில் சாவோ தன்னையும், தனது துணை சீன யேவ்-யும் சாதாரணமான, கண்ணியமான மனிதர்களாக பார்க்க வேண்டினார்.

"உங்கள் மகளாக உங்களை மகிழ்விக்கவே நான் விரும்புகிறேன். ஆனால், உறவு என வரும் போது, உங்கள் எதிர்பார்ப்பில் நானும், ரியாலிட்டியில் நானும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போக முடியாது." என மேலும் அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

ஆனால், மகளின் முடிவில் செசில் சாவோவிற்கு துளியும் சம்மதம் இல்லை. இன்று இது உலகிற்கு பரிச்சயம் ஆன உறவு முறையாக இருப்பினும், 77 வயதான செசில் சாவோவிற்கு இதை ஒப்புக்கொள்ள மனமில்லை.

ஒரு பேட்டியில், தனது மகளின் முடிவில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், அவளை மதிக்க வேண்டும். தனது தந்தையின் இந்த மாற்றம் கிகிக்கு பெருமூச்சு விடும் நிலையாகவும், ஒரு பெரிய இடரில் இருந்து தப்பித்தது போலவும் இருக்கிறது.

பிரிந்து வாழும் நிலை…

தன் மகளை மதிக்கிறேன் என்று தான் செசில் சாவோ கூறினாரே தவிர, அவரது துணையை குடும்பத்தில் சேர்த்துக் கொள்ள அல்ல. ஆம், கிகி மற்றும் செசில் சாவோ பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தந்தையின் இந்த முடிவால், கிகிக்கு எந்த வருத்தமும் இல்லை. அவரது தொல்லை விட்டது போதும் என்று வாழ்ந்து வருகிறார். தனது துணையுடன் நிம்மதியாக தனது வாழ்க்கை பயணத்தில் பயணம் செய்து வருகிறார் கிகி.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்