நீங்கள் கோடீஸ்வரராக கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்

Published:Sunday, 16 April 2017, 21:16 GMTUnder:Invention

வாஸ்து சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கைக்கு தேவையான செல்வம் மற்றும் நல்ல உடல் நிலைக்கு தேவையான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற அருமையான வாஸ்து டிப்ஸ் இதோ!

செல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்
  • உறங்கும் போது, தலையை தெற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். வடா அல்லது கபா தோஷங்கள் இருந்தால், இடது பக்கம் திரும்பியும், பிடா தோஷம் இருந்தால், வலது பக்கம் நோக்கி தூங்க வேண்டும்.
  • வீட்டின் நடுவே படிக்கட்டுகள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது முக்கிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டின் ஓரமாக படிக்கட்டை அமைக்கலாம்.
  • வீட்டின் மத்திய பகுதி காலியாக இருக்க வேண்டும் அல்லது எந்த ஒரு கனமான மரச்சாமான்களை வைத்திருக்கக் கூடாது.
  • தலைக்கு மேல் உள்ள உத்தரங்கள் வீட்டின் மைய பகுதி வழியாக செல்ல கூடாது. ஏனெனில் அவை குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும்.
  • வீட்டின் தென் கிழக்கு பகுதியில் பூமிக்கு அடியில் தண்ணீர் தொட்டி இருக்கக் கூடாது. ஏனெனில் அது உடல்நல பிரச்சனைகள் அதிகம் ஏற்படுத்தும்.
  • வீட்டின் அக்னி மூலையில், அதாவது வீட்டின் தென் கிழக்கு மூலையில் தினமும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.
  • வீட்டை சுற்றியுள்ள சுவரும் அதன் கதவும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். கதவின் இரு பக்கங்களிலும் சிட்ரஸ் பழங்கள் அல்லது செடிகளை வளர்க்கலாம்.
  • உங்கள் வீட்டில் யாரேனுக்கும் உடல்நலம் சரியில்லை என்றால், அவரின் அறையில் சில வாரங்களுக்கு மெழுகுவர்த்தியை எரிய வைப்பது நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.
  • வீட்டின் தென் திசையை நோக்கி ஆஞ்சநேயர் படத்தை வைத்திருப்பது, வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வீட்டின் செல்வ நிலை அதிகரிக்கும்.
Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்