கார் பிரியரின் செயல்... 3லட்சம் வைரக்கல்லால் ஜொலிக்கும் காட்சி

Published:Monday, 27 March 2017, 03:51 GMTUnder:Invention

3 லட்சம் விலைமதிப்புமிக்க வைரக்கற்கள் பதிக்கப்பட்ட பென்ஸ் எஸ் கிளாஸ் கார் எனக்கு சொந்தமானது இல்லை என சவூதி இளவரசர் மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.

2007ம் ஆண்டு துபாய் ஆட்டோ ஷோவில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட பென்ஸ் கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த கார் சவூதி இளவரசர் அல் வாலீத் பின் தலாலுக்கு சொந்தமானதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த பிரபல பத்திரிக்கைகளிலும் இதுபற்றி செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால், இவற்றுக்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சவூதி இளவரசர் அல் வாலீத்.

பென்ஸ் எஸ்எல்600 காரில்தான் விலைமதிப்புமிக்க சுவரோஸ்கி வைரக்கற்களை பதித்து காட்சிக்கு வைத்திருந்தனர். அந்த காரில் 3 லட்சம் வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஜப்பானை சேர்ந்த டி.ஏ.டி என்ற வாகன ஆக்சஸெரீஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த காரில் வைரக்கற்களை பதித்து கொடுத்தது. இந்த காரை தொட்டு பார்க்க 1,000 டாலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

துபாய் மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டு ஆட்டோ ஷோக்களில் சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்த கார் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.

இந்திய மதிப்பில் ரூ.30 கோடி விலை கொண்டதாக கூறப்படுகிறது. இந்த காருக்கு 24 மணிநேரமும் பலத்த பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கார் சவூதி இளவரசர் அல் வாலீத்துக்கு சொந்தமானதாக தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில், சமீபத்தில் இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அல் வாலீத்தின் சார்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், வைரக்கற்கள் பதிக்கப்பட்ட பென்ஸ் எஸ்எல்600 கார் எதுவும் இளவரசர் அல் வாலீத்திடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் பிரியரான அல் வாலீத்திடம் தற்போது 50 கார்கள் சொந்தமாக இருக்கிறது. ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் டாப்- 10 பணக்காரர்களில் அல் வாலீத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்