பெண் ஆசிரியை மாணவனை படுத்தும் பாடு... தீயாய் பரவும் காட்சி!

Published:Monday, 20 March 2017, 12:57 GMTUnder:General

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள பாலிடெக்னிக் ஒன்றில் மாணவர்களை பெண் ஆசிரியர் மார்க் எடுக்கவில்லை என்பதற்காக தரக்குறைவாக திட்டி அடிக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

இப்படி ஒரு மாணவரை அனைவரின் முன்பாகவும் அடித்து அசிங்கபடுத்தினால் அவனுக்கு மார்க் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வராது.

மாறாக நம்மை ஆசிரியர் அசிங்கப்படுத்தி விட்டாரே என்ற தாழ்வு மனப்பான்மையில் தவறான எதிர்வினைகளைத் தான் உருவாக்கும் என்பது சிந்தனையாளர்களின் கருத்து.

குறிப்பு

ஒரு மாணவனை ஆசிரியர் கண்டிக்கின்றார்கள் என்றால் அவர்கள் உருப்படாமல் போவதற்கு அல்ல. அவர்கள் இனிமேலாவது நல்ல இடத்திற்கு வர வேண்டும் என்பதற்காகவே.

நமக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே இவர்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். அந்த வகையில் யாரேனும் கண்டித்து திட்டினால் மனம் உடைந்து போகாமல் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வெற்றிபெற வேண்டும்.Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்