காமவெறியின் உச்சக்கட்டம்: தாத்தாவால் கற்பழிக்கப்பட்ட 10 வயது சிறுமி தற்கொலை

Published:Monday, 20 March 2017, 07:35 GMTUnder:Crime

கேரளாவில் பத்து வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த அவர் தாத்தாவின் செயலால் சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்டர். இவர் தனது மனைவி, மருமகள் மற்றும் பத்து வயதான பேத்தியுடன் வசித்து வருகிறார். விக்டரின் மகன் வெளியூரில் வேலை செய்து வருகிறார். விக்டர் அங்குள்ள ஒரு லாட்ஜில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தனது சொந்த பேத்தியான சிறுமியை விக்டர் கடந்த ஒருவருடமாக மிரட்டி கற்பழித்துள்ளார். இதனிடையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறுமி மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து விடயம் வெளியில் தெரியவர விக்டர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், விக்டர் வேலை செய்யும் லாட்ஜிலும் இது போன்ற பாலியல் செயலில் ஈடுப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்