இறந்த நபர் சவப்பெட்டியில் சிகரெட் பிடித்த காட்சி!.. எப்படி இது சாத்தியம்?

Published:Saturday, 11 March 2017, 04:59 GMTUnder:Invention

Dominican Republic நாட்டில் சடலமாக சவப்பெட்டியில் கிடந்த நபரின் வாயில் சிகரெட்டை வைத்து திணித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. Dominican Republic நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமீபகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு நேற்று மரண தண்டனை சிறையில் நிறைவேற்றப்பட்டது. தண்டனைக்கு பின்னர் அவரின் சடலம் மயான பூமியில் உள்ள சவப்பெட்டியில் வைக்கப்பட்டது.

சவப்பெட்டியை சுற்றி இறந்தவரின் உறவினர்கள் நின்றிருந்தனர். அதில் ஒருவர் சிகரெட்டை பத்த வைத்து இறந்தவரின் வாயில் சிறிது நேரம் வைத்து எடுத்தார். இப்படி சில முறை அவர் செய்தார். இதை அருகிலிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், இவர் இந்த வகை சிகரெட்டை விரும்பி பிடிப்பார்.

அதனால் தான் அவரை அடக்கம் செய்வதற்கு முன் அவருக்கு பிடித்ததை செய்கிறோம் என கூறியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பதிவேற்றப்பட்டு இதுவரை 330,000 முறை பார்க்கப்பட்டுள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்