மன்னார்குடி கும்பலின் மாஸ்டர் பிளான் அம்பலம்... பழனிச்சாமி ராஜினாமா கடிதம்?

Published:Friday, 17 February 2017, 14:14 GMTUnder:General

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா. தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அதிமுகவில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆளுமையை எதிர்த்து வெளியேறினார் பன்னீர்செல்வம்.

பன்னீர்செல்வத்தை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் வெளியேறினர். பின்னர் அதிமுகவில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி இரண்டாக பிரிந்து ஆட்சியை கைப்பற்ற போட்டி போட்டனர்.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்தார் சசிகலா.

பெங்களூர் சிறையில் சரணடைவற்கு முன் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் சசிகலா. அதில் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.5 கோடி பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், 3 கோடி முன் தொகையாகவும், எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மீதமுள்ள இரண்டு கோடி ரூபாய் செட்டில்மென்ட் செய்யப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஆர்.கே.நகரில் தினகரன் பேட்டியிட உறுதி செய்யபட்டதாக தகவல். அவர் வெற்றி பெற்றவுடன் எடப்பாடி முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டுள்தாக தகவல் வெளியாகி உள்ளன.

தினகரன் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற ஒரு வாரத்தில் பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் (இதற்காக தேதி குறிப்பிடாமல் ராஜினாமா கடிதத்தை சசிகலா வாங்கி வைத்துள்ளதாகவும்) அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது போல் நாளை பழனிச்சாமியும் தங்களுக்கு எதிராக திரும்பி விடுவாரோ என்ற அச்சத்தில் முன்னேற்பாடாக சசிகலா செயல்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்