எடப்பாடி- ஒபிஎஸ் ரகசிய கூட்டு: சிறையில் மயங்கி விழுந்த சசி

Published:Thursday, 16 February 2017, 15:43 GMTUnder:General

தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிறைந்ததாக நிமிடத்திற்கு நிமிடம் மாற்றம் வந்து கொண்டே உள்ளது.

கடந்த 5ம் தேதி முதல்வர் பன்னீர் செல்வத்தால் முன்மொழியப்பட்டு அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தோ்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், 7ம் தேதி பதவி ஏற்பு நடப்பதாக இருந்த நிலையில் 7ம் தேதி இரவு ஜெ., சமாதியில் தியானம் செய்த பன்னீர் சசி என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார். சசியை தவிர வேறு யார் முதல்வராகவும், பொதுச் செயலாளராகவும் வந்தாலும் அவர்களை பாதம் தொட்டு வரவேற்க தயார் என்று கூறினார்.

இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்ததையடுத்து நேற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதனால், சசிகலா தனது குடும்பத்தில் இருந்து கட்சி போய்விடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டிருந்த படி தினகரனுக்கு துணைப்பொதுச் செயலாளா் பதவியை நேற்று சசி கொடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற குழுத் தலைவராக அதிமுக எம்எல்ஏக்கள் தோ்வு செய்த நிலையில் அவரும் இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் மயிலாப்பூர் எம்எல்ஏ நாம் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும் அனைவரும் ஒன்றாக இணைந்து ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம் என்று கூறியதையடுத்து, பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும், சசி மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியைவிட்டும், ஆட்சியை விட்டும் அகற்றவேண்டும். வேறு யார் எந்த பதவிக்கு வந்தாலும் தான் ஏற்றுக் கொள்வதாக பன்னீர் கூறியதாகவும் தெரிகிறது.

இதற்கு எடப்பாடி பழனிச்சாமி சரி என்று கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்திக்கேட்டு சிறையில் இருக்கும் சசி மற்றும் அவரது குடும்பத்தினர் தலையில் இடி இறங்கிய நிலையில் உள்ளனா்.

இதனால் சசி மற்றும் அவரது குடும்பத்தினா் அடுத்தக்கட்ட முடிவு எடுக்க தயாராகிவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த சசி சிறையில் மயங்கி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்