தனது திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்தவரே தான் சிறைக்குச் செல்ல காரணம்: கதறும் சசி

Published:Wednesday, 15 February 2017, 04:57 GMTUnder:General

தனக்கு பதவி ஆசை இல்லை என்று கூறிவந்த சசிகலா திடீரென முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டதற்கு அவரை சுற்றியிருந்த சொந்த பந்தங்களே காரணம் என கூறப்படுகிறது.

முதல்வர் பொறுப்பில் இருந்தால் எப்படியாவது சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தப்பித்துவிடலாம் என டி.டி.வி.தினகரனும், திவாகரனும், டாக்டர் வெங்கடேஷுனும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக சசிகலாவின் பின்னால் இருந்து அனைத்தையும் இயக்கியவர் அவரின் கணவர் நடராஜன் தானாம். சசிகலாவுக்கு முதல்வர் ஆசை காட்டியது அவர்கள்தான். எப்படியும் முதல்வராகிவிட்டால் வழக்கு விடுதலை எளிமையாகிவிடும் என்று கூறி அவரைத் தூண்டிவிட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தான் சிறைக்குச் செல்வதற்கு முழுக்க முழுக்க காரணம் கருணாநிதி என்று குற்றம் சாட்டியுள்ளார். கலைஞர் கருணாநிதி அவர்கள் சசிகலாவின் திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலாவைப் பற்றி பலரும் பெரிதாய் அறிந்திராத உண்மைகள்

சி.டி கடை, மன்னார்குடி குடும்பம், ஜெயலலிதாவின் தோழி, சொத்து குவிப்பு வழக்கு போன்றவை மூலம் பரிச்சயம் ஆனவர் வி.கே. சசிகலா. இவரை பற்றியும், இவரது வரலாறு பற்றியும் சில விஷயங்கள் நாம் அறிந்திருப்போம். ஆனால், இவரை பற்றி பலரும் பெரிதாய் அறியாத உண்மைகள் சில இருக்கின்றன.

* திருத்துறைப்பூண்டியில் சசிகலாவின் தாத்தா மருந்து கடை நடத்தி வந்தவர். இவரது மறைவுக்கு பின்னர் சசிகலாவின் தந்தை விவேகானந்தன் அந்த கடையை நடத்து வந்தார்.

* சசிகலாவுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். இவர் ஐந்தாவது நபர். இவரது மூத்த அண்ணன் சுந்தரவதனம் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மன்னார்குடியில் பணிமாற்றம் ஆன பிறகு மொத்த குடும்பமும் மன்னார்குடிக்கு சென்று விட்டனர்.

* சசிகலா - நடராஜன் திருமணத்தை நடத்தி வைத்தவர் கலைஞர் மு. கருணாநிதி.

* சசிகலா அவர்களின் உறவினர் ராவணன் தான் மிடாஸ் டிஸ்டில்ரிஸ்-ன் உரிமையாளர். இங்கிருந்து தான் தமிழக அரசு இயக்கம் டாஸ்மாக்கிற்கு அதிகளவில் சரக்கு சப்ளை செய்யப்படுகிறது.

* 1989 - 2011; 2012 - 2016 வரை என போயஸ்கார்டன் வீட்டில் மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதாவுடன் தங்கியிருந்தார் சசிகலா.

* சசிகலா வைணவ குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை என்ற போதிலும், ஜெயலலிதாவை போல வைணவ முறையில் திலகம் இட்டு கொள்கிறார்.

* 1980-களில் தெற்கு ஆற்காடு ஆட்சியாளராக இருந்த சந்திரலேகா அவர்களிடம் தனது மனைவி சசிகலாவை அன்று பிரச்சார செயலாளராக இருந்த ஜெயலலிதா அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க கோரி பேசினார் நடராஜன். இதன் மூலம் நிகழ்சிகளை வீடியோ பதிவு செய்யும் பணி கிடைக்கும் என வேண்டினர். இப்படி தான் ஜெயலலிதா - சசிகலா உறவு ஆரம்பமானது.

* இராமாயணத்தில் வரும் கைகேயி - கூனியின் ஜாதக கட்டமைப்பும், ஜெயலலிதா - சசிகலாவின் ஜாதக கட்டமைப்பும் ஒரே மாதிரி அமைந்திருப்பதாக 15 வருடங்களுக்கு முன்னர் ஒரு ஜோதிடர் கூறியாதாக செய்தி தகவல்கள் கூறுகின்றன.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்