காதலை ஏற்கலை..ஆசிட் வீசிய கொடூரன்! பதற வைக்கும் சம்பவம்

Published:Wednesday, 11 January 2017, 10:02 GMTUnder:General

இந்திய தலைநகர் டெல்லியில் திருமணத்திற்கு மறுத்த பெண்மணியின் குழந்தையை கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கிய கொடூரனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

டெல்லியில் கணவருடன் குடியிருந்து வருபவர் 25 வயதான சோனி. இவரது மகன் ஆதித்யா (2) திடீரென்று காணாமல் போனதாக கூறப்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்களுடன் இணைந்து சோனி மற்றும் கணவரும் தேடுதலில் ஈடுபட்டனர்.

ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அடுத்த நாள் காலையில் சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படும் பகுதியில் சிறுவன் ஒருவனது முனகும் குரல் கேட்ட சாரதி ஒருவர் குறித்த பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

முகம் மற்றும் உடலில் பல பகுதியில் அமிலத்தால் அந்த சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் உடல் வெந்து மிகவும் ஆபத்தான நிலையில் சிறுவனை அப்பகுதியில் தள்ளிவிட்டு குற்றவாளிகள் தப்பியுள்ளனர்.

இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்ட சோனி உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றார். ஆபத்து கட்டத்தை தாண்டிய சிறுவனிடம் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்திய நபர் 20 வயதான கோவிந்த் ராம் எனமும், மங்கல் என்ற நபருக்காக இந்த கொடுஞ்செயலை தாம் செய்ததாகவும் ராம் ஒப்புக்கொண்டுள்ளான்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய மங்கல் என்பவன், சோனியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பல ஆண்டுகளாக தொல்லை தந்து வருபவன்.

மங்கலின் தொல்லை காரணமாக சோனியின் குடும்பம் தங்களது கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து வேறு பகுதிக்கு குடியேறியுள்ளது.

இருந்தும் மங்கல் தொடர்ந்து தொல்லை அளித்து வந்துள்ளான். சோனி தற்போது 8 மாத கர்ப்பிணியாகவும் 2 வயது குழந்தைக்கு தாயாராகவும் உள்ளார்.

இருப்பினும் அந்த நபர் தொடர்ந்து தொல்லை அளித்து வரும் நிலையில் தற்போது தமது குழந்தையை கடத்தி சென்று தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் தம்மால் தாங்க முடியவில்லை என்று சோனி பொலிசாரிம் முறையிட்டுள்ளார்.

தற்போது தலைமறைவாக இருக்கும் மங்கலை கைதும் செய்யும் நோக்கில் பொலிசார் முனைப்பு காட்டி வருகின்றனர்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்