பணத்தை கட்டுக்கட்டாக சேகரிப்பவரா நீங்கள்: உங்களுக்கு ஆபத்து காத்திருக்கின்றது..?

Published:Wednesday, 11 January 2017, 07:25 GMTUnder:Living

உலகில் வாழும் மனிதர்கள் பணம் சேகரிப்பதை அதிகம் விரும்புகின்றனர்.அந்தளவுக்கு பணம் மனிதனின் வாழ்க்கையில் அத்தியவசியமான பொருளாக மாறியுள்ளது.

எவ்வாறானும் அதிக விருப்பத்தில் சேகரிக்கும் நாணயத்தாள்கள் மனிதனுக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பயன்படுத்தும் அமெரிக்க டொலர்களில் மாத்திரம் மனிதனுக்கு தீங்கை ஏற்படுத்தும் 3 ஆயிரம் பக்டீரியாக்கள் இருப்பதாக நியூயோர்க் பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றில் பக்டீரியாக்கள் மனிதனுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியன எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

2010 ஆம் 10 நாடுகளின் நாணயத்தாள்களை பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் பயன்படுத்தும் நாணயத்தாள்களில் நான்கில் ஒன்றில் பகடீரியா ஆபத்து காணப்படுகிறது.

வைரஸ்கள், தொற்று கிருமிகள், குஸ்டரோகம் போன்ற நோய்களின் கிருமிகள் நாணயத்தாள்கள் மூலமாக பரவி வருகின்றன.

இயற்கையான முறையிலும் நாணயத்தாள்களில் பக்டீரியாக்கள் பரவக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாணயத்தாள்கள் மூலம் தொற்று நோய்கள் பரவினால் உலகில் பேரழிவு ஏற்படக் கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

நாணயத்தாள் பயன்படுத்துவதை விட மனிதர்கள் இலத்திரனியல் பணப் பரிமாற்றத்திற்கு உடனடியாக மாறவேண்டும் எனவும் அவர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்